ரு ஆண், ஒரு பெண்ணை மணந்து குடும்பத் தலைவனானபின்பு தான், அவன் சமுதாயத்தில் முழுமை பெற்றவனாக மதிக்கப்படுகிறான். ஒரு பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவதும், ஒரு ஆணுக்கு நல்ல மனைவி அமைவதும், அவர்கள் பூர்வ ஜென்ம புண்ணியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

Advertisment

இப்பிறவியில் நல்ல துணையை அடைந்து மகிழ்வோடு வாழ்பவர்களின் ஜாதகத்தில், கிரகங்கள் அமைந்துள்ள நிலையை அறிவோம்.

பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் சூரியன் இருந்தால், நிர்வாகத்திறமை, இரக்கம், கௌரவ குணம், முன்கோபம், புகழ் உள்ளவர்கள். ஆணாக இருந்தால் இதுபோன்ற குணங்கள் கொண்ட மனைவியையும், பெண்ணாக இருந்தாள் கணவனையும் அடைவார்கள்.

HB

Advertisment

லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் சந்திரன் இருந்தால், மனைவி அழகானவள்; குழந்தைகள்மேல் பாசமுள்ளவள்; மனதில் சலனம், குழப்பம், சந்தேக புத்தி உடையவள். ஒருசில ஆண்கள் வயதில் மூத்த பெண்ணையோ அல்லது சமமான வயதுடைய பெண்ணையோ மணம்புரிவர்.

7-ஆவது ராசியில் புதன் இருந்தால் புத்திசாலி; தந்திர குணம், சாமர்த்தியம், கலகலப்பாக பேசுபவள்; இளமையான தோற்றமுடையவள் மனைவியாக அமைவாள். குறைந்த வயதுடைய இளம் பெண்ணை இளம்வயதிலேயே மணம் புரிவான்.

7-ஆவது ராசியில் குரு இருந்தால் சாந்தம், பொறுமை, நேர்மை, குடும்பப் பொறுப்பு, குடும்பத்தில் பெரியவர் களையும் உறவுகளையும் மதிக்கும் பெண்ணை மணம்புரிவான்.

7-ல் சுக்கிரன் இருந்தால், அவனுக்கு அமையும் மனைவி அழகானவள். ஆடை, ஆபரணங்கள் அணிந்து, அலங்காரம் செய்துகொள்வதில் விருப்பமுள்ளவள். சுகபோகத்துடன் வாழ விரும்புவாள். ஜாதகன் வயதிற்கேற்ற பெண்ணைத் திருமணம் செய்வான்.

ஆண், பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் லக்னாதிபதியே இருந்தால், கணவன்- மனைவி இருவரும் ஒருவர்மீது ஒருவர் மிகப்பாசத்துடன் இருப்பார்கள். இளம்வயதிலேயே திருமணம் நடக்கும். ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருக்க மாட்டார்கள்.

7-ல், லக்னத்திற்கு 2-ஆவது ராசிக்குரிய கிரகம் இருந்தால், மனைவிமூலம் பணம், சொத்து கிடைக்கும். மனைவிக்கு சில அவமானங்கள், விபத்து உண்டாகும்.

3-க்குடையவர் 7-ல் இருந்தால் மனைவி நல்ல குணவதி. குடும்பப் பெருமையை உயர்த்திக் காப்பாற்றுவாள்.

லக்னத்திற்கு 4-க்குடையவர் 7-ல் இருந்தால், ஜாதகருக்கு உத்தியோகம், தொழில்செய்து பணம் சம்பாதிக்கும் மனைவி அமைவாள். மனைவி யோகத்தால், திருமணத்திற்குப்பின்பு வாழ்வில் உயர்வை அடைவான்.

5-க்குடைய கிரகம் 7-ல் இருந்தால், ஆண் தான் விரும்பும் பெண்ணை மணந்து கொள்வான். சிலர் தான் காதலித்த பெண்ணையே மணப்பார்கள். திருமணத் திற்குப்பின்பு வாழ்க்கையில் உயர்வு காண்பர்.

7-க்குடைய கிரகம் 7-ல் இருந்தால், மனைவி தன் சுய உழைப்பால் வாழ்பவள். பிறரைச் சார்ந்து எதிர்பார்த்து வாழமாட்டாள்.

8-க்குடைய கிரகம் 7-ல் இருந்தால், மனைவியால் யோகம், நன்மை, மனைவிவழி உறவுகளால் நன்மை, அவர்கள்மூலம் சொத்து, வீடு, வாகனம், ஆபரணம் கிடைக்கும். மனைவி செல்வாக்கான குடும்பத்திலிருந்து வருவாள்.

9-க்குடைய கிரகம் 7-ல் இருந்தால், மனைவி தைரியமானவளாக இருப்பாள். மனைவி வீட்டாராலும், மனைவியின் சகோதரர்கள் மூலமும் ஆதரவு, உதவி கிட்டும்.

10-க்குடைய கிரகம் 7-ல் இருந்தால், மனைவி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த வள். மனைவியின் குடும்பத்தாரால் செல்வம் அடைவான்.

11-க்குடைய கிரகம் 7-ல் இருந்தால், திருமணத்திற்குப்பின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள்மீது அதிகம் பாசமுள்ள மனைவி. ஆண்- பெண் பிறப்பு ஜாதகத்தில், லக்னத் திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத் திலேயே இருந்தால், கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் மிகப் பாசத்துடன் வாழ்வார்கள்.

7-க்குரிய கிரகம் லக்னத்திற்கு 3-ஆவது ராசியில் இருந்தால், குடும்பப் பொறுப்புள்ள குணவதியைத் திருமணம் புரிவான்.

7-க்குரிய கிரகம் லக்னத்திற்கு 4-ஆவது ராசியில் இருந்தால், உத்தியோகம், தொழில் செய்து சம்பாதிக்கும் பெண்ணை மணம் புரிவான்.

7-க்குரிய கிரகம் 7-ல் இருந்தால் மனைவி புகழ், ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ்வாள்.

7-க்குடைய கிரகம், 10-ஆவது ராசியில் இருந்தால், மனைவிமூலம் சொத்து, பணம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களின் உதவியால், நல்லதொழில், உத்தியோகம் அடைவான். தொழிலில் முன்னேற்றமும், வாழ்வில் செல்லச் செழிப்பும் உண்டாகும்.

7-க்குடைய கிரகம் 11-ஆவது ராசியில் இருந்தால் திருமணத்திற்குப்பின், மனைவியால் சுகம், போகம், செல்வச்செழிப்பு, வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

7-க்குடைய கிரகம் லக்னத்திலேயே இருந்தால், திருமணத்திற்குப்பிறகு அவருக்கு அதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய், கடன், எதிரிகளால் உண்டான தொல்லைகள் என எதுவாக இருந்தாலும் நீங்கிவிடும்.

லக்னாதிபதி கிரகமும் 7-ஆவது ராசிக்குடைய கிரகமும் ஒரே ராசியில் சேர்ந்திருந்தாலும் அல்லது இவையிரண்டும் அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலும், கணவன்- மனைவி இருவரும் ஒருவர்மீது ஒருவர் பாசம் கொண்டு, வாழ்க்கையை அனுபவித்து சந்தோஷமாக வாழ்வார்கள்.

லக்னாதிபதியும், 7-க்குடைய கிரகமும் ஒரே ராசியில் இணைந்திருந்தால், கணவன்- மனைவி இருவரும் நெருக்கமான உறவு கொண்டு வாழ்வார்கள்.

7-க்குடைய கிரகத்துடன், லக்னத்திற்கு 4, 8, 12-ஆவது ராசிகளுக்குரிய கிரகங்கள் சேர்ந்து, ஒரே ராசியில் இருந்தால் உத்தியோகம் பார்க்கும் பெண் மனைவியாக வருவாள்.

7-க்குடைய கிரகம், லக்னத்திற்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் இருந்தால் உத்தியோகம் பார்க்கும் பெண் மனைவியாக அமைவாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இதுபோன்று கிரகங்கள் அமைந்திருந்தால், அவள் திருமணம் புரியும் கணவனால் அந்தப் பெண் இந்த நன்மைகளை அடைந்து சந்தோஷமாக வாழ்வாள்.

அடுத்த இதழில் இல்லறத்தில் இன்ப மில்லாத கணவன்- மனைவி யார் என்பதை அறிவோம்.

செல்: 99441 13267